கடலூரில் 1,300 புதிய மருத்துவ படுக்கை வசதி - தயார் நிலையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி

கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக கடலூரில் 1300 மருத்துவமனை படுக்கைகள் புதியதாக வரவழைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-10 12:06 GMT
கொரோனா வைரஸ் இரண்டாம் நிலையில் உள்ள இந்தச் சமயத்தில் மூன்றாம் நிலைக்கு பரவக் கூடாது என பல்வேறு முயற்சிகளை கடலூர் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.  இதுவரையில் ஏறத்தாழ 2000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் நகர அரங்கில் 1300 புதிய படுக்கைகளும் மற்றும் மருத்துவ உபகரணங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏராளமான முகக் கவசங்கள் கைகழுவும் கிருமி நாசினி மற்றும் தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் என அனைத்தும் தயார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்