வயது முதிர்ந்த மூதாட்டியை நடுரோட்டில் வீசிச் சென்ற பேரன் "பெற்றது 2 பிள்ளைகள்.. ஆனால் கவனிக்க..?" - மரித்து விட்டதா மனித நேயம்?

Update: 2024-04-29 08:32 GMT

வயது முதிர்ந்த மூதாட்டியை நடுரோட்டில் பேரன் வீசி விட்டுச் செல்ல, உதவ வந்த நபரை பத்திரமாக போகுமாறு அக்கறையுடன் மூதாட்டி கூறிய சம்பவம் கலங்க வைத்துள்ளது...

சேலம் வாழப்பாடி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை புற வழிச்சாலையில் நள்ளிரவில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை சிலர் வாகனத்தில் இருந்து சாலையோரம் வீசி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது... அவ்வழியே சென்ற வாழப்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பார்த்திபன் உடனடியாக போலீசுக்குத் தகவல் அளித்துள்ளார்... சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்... விசாரணை நடத்தியதில் மூதாட்டியின் பெயர் ஷீலா என்பதும், அவர் கள்ளக்குறிச்சி நயினார் பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் மூதாட்டிக்கு பாலுசாமி, தனசேகர் என்ற 2 மகன்கள் உள்ள நிலையில், அவரது பேரன் காரில் மூதாட்டியை ஏற்றி வந்து சாலையோரம் வீசிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது... "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்ற பழமொழிக்கேற்ப வயதான காலத்தில் பெற்ற தாயைக் கூட கவனிக்க முடியாதளவு மனித மனம் அவ்வளவு மரத்துப் போய் விட்டதா என விரக்தி அடைய வைக்கிறது இச்சம்பவம்... இருந்த போதும், தன்னிடம் நலம் விசாரித்த சமூக ஆர்வலரிடம், "பார்த்து பத்திரமா போ" என்று தாய்ப்பாசத்தோடு அந்த மூதாட்டி கூறியது கேட்போரைக் கலங்க வைக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்