தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

Update: 2020-04-09 17:11 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால், சாலையில் வெள்ளநீா் பெருக்கெடுத்து  ஓடியது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையால், வத்தலகுண்டு மலைச்சாலையில் குருசரடி என்ற இடத்தில் சகதிகள் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில், மேல்மலையனூர் அருகே பருதிபுரம் பகுதியை சேர்ந்த மணி என்பவர், மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் வேலூர், குடியாத்தம், சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், விருத்தாசலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.





Tags:    

மேலும் செய்திகள்