ரூ.1.84 கோடி வரி செலுத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் - நோட்டீசை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஒரு கோடியே 84 லட்ச ரூபாய் வரி செலுத்த ஜி.எஸ்.டி., துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2020-02-29 02:36 GMT
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்