ஆண்டிபட்டி பகுதியில் கேரள லாட்டரி விற்பனை அமோகம் - விற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கேரள மாநில லாட்டரிகளின் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-02-16 04:08 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், சமீபகாலமாக கேரள மாநில லாட்டரிகளின் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் குலுக்கல் முடிவுகளை வாட்ஸ் சமூகவலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. ஏழை மக்களை பாதிக்கும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்