"இன்று கேரளாவில் 11 மாவட்டங்களில்.." - சுட்டெரிக்கும் வெயிலில் சட்டென வந்த குளுகுளு நியூஸ்

Update: 2024-05-02 05:26 GMT

கேரளாவின் 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனந்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெப்பம் தொடரும் என்றும் அப்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்