"மகள் கைது"-தந்தைக்கு வந்த மர்ம Call - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் மக்களே உஷார்

Update: 2024-05-02 05:19 GMT

சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் புதுப்புது யுக்திகளை கையாண்டு மக்களிடம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 24ம் தேதி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அவரிடம் தான் காவல் அதிகாரி பேசுவதாகவும், சமூக வலைதளத்தில் 50 லட்ச ரூபாய் பண மோசடி வழக்கில் உங்கள் மகளுடன் சேர்த்து 4 பேரை விசாரித்து வரும் நிலையில், உங்கள் மகள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவருடன் பேசுமாறு அந்த மர்ம நபர் கூறியுள்ளார். மேலும் உங்கள் மகளின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி கூட வேறு யாராவது இதை செய்ததாக வழக்கை மாற்ற முடியும் என்றும், விடுவிக்க பணம் தர வேண்டும் எனவும் கூறி ஜி பே எண்ணைக் கொடுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் தனது நண்பர் மூலம் அந்த தந்தை வீட்டிற்கு அழைத்து விசாரித்த போது தனது மகள் பாதுகாப்புடன் இருப்பது தெரிய வந்த நிலையில்,

உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டு சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்... இதனால் பொதுமக்கள் மர்ம நபர்கள் யாரேனும் உங்களுடைய மகன் அல்லது மகளை கடத்திவிட்டதாகவோ அல்லது விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவோ கூறி பணம் கேட்டால் உங்கள் பிள்ளைகளைத் தொடர்பு கொண்டு உறுதி செய்யுமாறும், புகாரளிக்க 1 9 3 0 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கவும் தமிழக சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்