பாகிஸ்தானியருக்கு கார் கொடுத்த அப்துல்காதர் ரஹீம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

பாகிஸ்தானை சேர்ந்தவர் தமிழகம் வருவதற்கு உதவிய கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்பட 3 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-24 18:27 GMT
திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த அவர், தொழில் நிமித்தமாக அடிக்கடி பஹ்ரைன் சென்று வந்துள்ளார். அண்மையில், கொச்சி வழியாக தமது தோழியுடன் அப்துல்காதர் ரஹீம் இந்தியா வந்துள்ளார். பஹ்ரைன் சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த அவரது தோழியை கேரள போலீசார் கைது செய்த நிலையில், அப்துல் காதர் ரஹீமை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்நிலையில், தீவிரவாத அமைப்புடன் தமக்கு தொடர்பில்லை என கூறப்போவதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், கொச்சியில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்துள்ளார். அங்கு வந்த கேரளா போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், பஹ்ரைனில் இருந்து 60 கிலோ, இரும்பு உதிரி பாகங்களை கேரளாவுக்கு வாங்கி வந்ததும், பாகிஸ்தானியர் ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் செல்ல தமது காரை அவர் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.இதேபோல, சென்னையில் சித்திக் என்பவரையும், கோவை உக்கடத்தில் ஷகீர் என்பவரையும் போலீசார் பிடித்துள்ளனர். இந்த 3 பேரையும் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்