குழந்தைகள் அமைப்பின் தூதரானார் சாதனை பெண் "வேண்டாம்"

திருவள்ளூர் மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சிறப்பு தூதுவராக, சாதனை பெண், "வேண்டாம்" நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-07-19 19:29 GMT
திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த அசோகன் - கெளரி தம்பதியின் 3-வது மகளின் பெயர் 'வேண்டாம்'. இந்தப் பகுதியில் பெண் குழந்தைகள் பிறப்பு தொடர்பாக நிலவும் நம்பிக்கை காரணமாக அவருக்கு 'வேண்டாம்' என பெற்றோர் பெயரிட்டனர். தற்போது, சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் "வேண்டாம்", கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, ஜப்பான் நிறுவனத்தில் ஆண்டிற்கு 22 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளான நிலையிலும், விடா முயற்சியுடன் வேண்டாம் படித்து, பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியானது. இந்நிலையில்,  திருவள்ளூர் மாவட்ட "பெண் குழந்தை காப்போம், பெண் குழந்தையை கற்பிக்கும்" என்ற அமைப்பின் சிறப்பு தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சாதனை மாணவி வேண்டாமை, ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்