இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-04-30 17:54 GMT

திருச்சியில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது...

தலைமறைவான மேலும் மூவருக்கு போலீஸார் வலை...

தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்... அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108.50 டிகிரி பாரன்கீட் வெப்பம் பதிவு...

73 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஊட்டியில் அதிகபட்சமாக 84.92 பாரன்கீட் வெப்பம் பதிவானதால், மக்கள் அவதி...

ஓபிசி, பட்டியலினத்தவரின் இடஒதுக்கீட்டை பறித்து வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் திட்டம்...

பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்...

அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்....

முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை...

ஏற்காடு விபத்தில் காயமடைந்த 56 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

காவல் ஆணையாளர், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மேயர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல்... விபத்து குறித்து போலீஸார் விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்