ஆலயங்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு : 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் தர்ணா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-19 13:57 GMT
வெள்ளலூர், உறங்கான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 62 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வெள்ளலூர் நாடு.  இங்குள்ள காவல் தெய்வங்களான ஏழைகாத்த அம்மன், வல்லடிகாரர் திருக்கோயில் உள்ளிட்டவற்றை இந்துசமய அறநிலையத்துறையினர் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து வெள்ளலூர் நாட்டிற்குட்பட்ட 62 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளலூர் ஊர் மந்தையில் ஒன்று கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், மதுரை உதவி ஆணையர் விஜயன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது "கோவிலின் நிர்வாக கமிட்டியில் கிராமத்தினர் இருப்பார்கள் என்றும், கோயிலின் வரவு செலவுகளை அறநிலையத்துறை மேற்கொள்ளும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் கூச்சலிட்டடு மறுப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து அங்திருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்