"பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை" - டிபிஐ வளாகத்திற்கு படையெடுக்கும் பெற்றோர்

நீண்ட நேரம் காத்திருந்து புத்தகங்களை பெற்று சென்றனர்

Update: 2019-06-18 03:57 GMT
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் 3, 4 , 5, 7 , 8  ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்படவில்லை என தெரிகிறது. தனியார் பள்ளிகளில் இதர வகுப்பு பாட புத்தகங்கள் சரிவர கிடைக்காததால், பெற்றோர்கள் டிபிஐ வளாகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். பாடநூல் கழக அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, குழந்தைகளுக்காக பெற்றோர் பாடப்புத்தங்களை வாங்கிச் செல்கின்றனர். "60 முதல் 80 சதவீத புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் அனுப்பப்படும் எனவும் பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்