விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உடைத்தெரிந்த சூறைக்காற்று

Update: 2024-05-06 12:12 GMT

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசியதால், பல லட்சம் மதிப்பிலான வாழை, தென்னை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிகள் சேதம் அடைந்துள்ளன.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த செவ்வாழை நாளிப்பூவன் ரகங்கள் பலத்த சேதம் அடைந்தன. செலவு செய்த பணம் கூட கிடைக்காத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் வீசிய சூறைகாற்றில், 3 லட்சம் வாழைகள் சாய்ந்தன. முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் சேதமடைந்த வாழை மரங்கள், வெற்றிலை கொடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளபுரத்தில் 20 லட்சம் மதிப்பிலான வாழை, பப்பாளி, முருங்கை, தென்னை மரங்கள் சூறைக்காற்றில் சேதம் அடைந்தன. சேத விவரங்களை கணக்கீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சுழன்று அடித்த சூறைக்காற்றில், 50 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் வாழைமரங்கள் முற்றிலும் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்