நுரையீரலை தாக்கிய துப்பாக்கி குண்டு : துப்பாக்கி குண்டை அகற்றி மருத்துவர்கள் சாதனை

சிறுவனின் நுரையீரலை தாக்கிய துப்பாக்கி குண்டை அகற்றி சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2019-05-21 21:04 GMT
சிறுவனின் நுரையீரலை தாக்கிய துப்பாக்கி குண்டை அகற்றி சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் கார்த்திக், ஏர்கன் துப்பாக்கியை கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக துப்பாக்கி வெடித்து அதிலிருந்த சிறிய குண்டு சிறுவனின் வலது மார்பை துளைத்தது.  இதில் சிறுவனின் நுரையீரலில் குண்டு சிக்கியது.இதனையடுத்து சிறுவன் கார்த்திக் பலத்த காயத்துடன் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிடி ஸ்கேன் பரிசோதனையில் துப்பாக்கி குண்டு வலது நுரையீரலில் நடுப்பகுதியில் சிக்கியிருந்ததை உறுதி செய்யப்பட்டது. .இதனையடுத்து மருத்துவக்குழுவினர், அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் வலது மார்பு வழியாக துளையிட்டு நுரையீரலில் சிக்கியிருந்த குண்டை அகற்றினர். தற்போது  சிறுவன் கார்த்திக் உடல் நலம் தேறி வழக்கமான உணவுகளை உண்டு வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்