அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வரும் கல்வியாண்டு முதல் அமல் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Update: 2019-05-21 10:01 GMT
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் தலைமைச் செயலகத்தில்,  ஆலோசனை கூட்டம் நடந்தது.தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில்  இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தனியாக தற்காலிக ஆங்கில பேச்சு பயிற்சி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி க்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்