"தக் லைஃப்" படத்தில் சிம்பு நடிப்பது உறுதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Update: 2024-05-08 17:06 GMT

"தக் லைஃப்" படத்தில் சிம்பு நடிப்பது உறுதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் தக் லைஃப். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இந்த நிலையில் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் சிலம்பரசன் கமல்சானுக்கு மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்