வசதி குறைவான பொறியியல் கல்லூரிகள் பட்டியலை வெளியிட முடியாது - அண்ணா பல்கலை துணைவேந்தர்

வசதி குறைவான பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்களை வெளியிட்டால், அங்கு பயிலும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-17 09:51 GMT
வசதி குறைவான பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்களை  வெளியிட்டால், அங்கு பயிலும்  மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். கிண்டி பொறியியல் கல்லூரியின் 225 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரியைப் பற்றி முழுமையாக விசாரித்து அதன் பிறகு அங்கு சேர்வதா, வேண்டாமா என்பதை மாணவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசியல் தலையீடுகள் என்பது சர்வ சாதாரணமான ஒன்று என்றும், அனைத்து இடங்களிலும் அது இருப்பதாகவும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்