வேலூரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டபோது விபரீதம் : வாய்ப்பேச முடியாத நபர் உயிரிழப்பு

வேலூரில் மணல் கொள்ளையின்போது மண்ணுக்கு அடியில் சிக்கிய, வாய்ப்பேச முடியாத நபர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Update: 2019-05-16 19:59 GMT
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வளர்புரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி அவருடைய மகன் தங்கவேல், தாஸ், ஏழுமலை ஆகியோர் ந‌ந்தி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மணல் சரிந்த‌தில், 4 பேரும் மணலுக்கு அடியில் சிக்கி கொண்டனர். அருகே இருந்த கிராம மக்கள் அனைவரையும் மண்ணில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தலை மண்ணுக்குள் சிக்கிய நிலையில், சுப்பிரமணியின் மகன் தங்கவேலு மூச்சுத்திணறி பரிதபமாக உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த தங்கவேலு மற்றும் அவரது தம்பி, தங்கை ஆகியோர் வாய்ப்பேச முடியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கவேலுவின் தந்தை சுப்பிரணி உள்பட மற்ற மூவரையும் மீட்ட பொதுமக்கள் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்