பழுதான குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் : குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2019-04-22 08:40 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே  நல்லதண்ணி குளக்கரையில் 
அமைக்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் மூலம் அப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர். அங்கு ,பொதுமக்களிடம் 5 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இயந்திர பழுது காரணமாக கடந்த 1 மாதத்திற்கு மேலாக குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் இயங்க வில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
கோடையின் தாக்கம் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  இயங்காததால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுத்தகரிப்பு நிலையத்தின் பழுதை சரிசெய்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்