தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-17 12:12 GMT
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சில இடங்களில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்