பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்
கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.;
கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் இருந்தது. கோவையில் இருந்து பல்லடத்தில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்மிற்கு பணத்தை கொண்டு செல்வதாக கூறினாலும், உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.