தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை
தேர்தல் நாளிலும், அதற்கு முதல் நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.;
தேர்தல் நாளிலும், அதற்கு முதல் நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. பீகாரில், 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, இந்த முடிவை தேர்தல் ஆணையம், முதன்முதலில் எடுத்தது. இந்த திட்டத்திற்கு, இதுவரை, மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், பீகார் தேர்தலின்போது பதிவான வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் ஆணையம், தமது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, 'தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.