ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் முருகன் தொடர் உண்ணாவிரதம்

"தனது உடலை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்" - முருகன்

Update: 2019-02-13 21:52 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என வேலூர் ஆண்கள் சிறையில் முருகன் 12 நாட்களாகவும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையில் 5 நாட்களாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நிலை மோசமானதை அடுத்து, சிறை மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்படுள்ளனர்.   அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் வழக்கறிஞர், உண்ணவிரதத்தின் போது  சிறையில்  இறந்துவிட்டால் தனது உடலை அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் வழங்க வேண்டும் என்று கோரி சிறை கண்காணிப்பளரிடம் முருகன் மனு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்