ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை : பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2019-02-13 14:09 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக  பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சின்னதம்பி யானை 5 வயதிலேயே தாயை பிரிந்து காட்டு எல்லை பகுதியில் பெரியதம்பி மற்றும் விநாயகன் யானைகளுடன் வலம் வந்துள்ளது. வனத்துறையால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி மீண்டும் தன் இருப்பிடத்தை நோக்கி பயணம் மேற்கொண்டது. பிடிபட்டு அடிமைபடுமா அல்லது சுதந்திரம் கிடைத்து சுற்றி வருமா என்ற  

கேள்வி எழுந்த நிலையில் சின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்