ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு : வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு

வருமான வரித்துறை சோதனையின் போது, பறிமுதல் செய்யப்படும் ஆவணங்கள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-01-10 20:30 GMT
ஆர்.கே.நகர் தொகுதி பணப்பட்டுவாடா குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  கடந்த 2017 ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 4 கோடியே 71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான  விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தவறான கருத்து தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.  

சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ரகசியமானது எனவும் வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்த ஆவணங்களை மதிப்பீடு செய்ய வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்