"மீனவ நண்பன்" செயலி அறிமுகம்
சென்னை - காசிமேட்டில், "மீனவ நண்பன்" என்கிற புதிய செயலியை கடலோர காவல் படை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலம் கடலில் மீன்கள் கிடைக்கும் பகுதி, கடல் நீரோட்டம், வெப்ப நிலை குறித்த தகவல்களையும், புயல், சுனாமி குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும்.