பறக்க முடியாமல் திணறிய பெலிக்கான் பறவைக்கு சிகிச்சை

கோவை சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் பெலிகான் பறவை ஒன்று நோய்வாய்ப்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது.

Update: 2018-10-21 13:11 GMT
கோவை சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் பெலிகான் பறவை ஒன்று நோய்வாய்ப்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறை ஊழியர்கள் அந்த பறவையை மீட்டு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த பறவைக்கு முதல்கட்டமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்