கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து

பக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Update: 2018-10-21 09:07 GMT
பக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தும், இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  
இதுதொடர்பாக ஜூன் 7ஆம் தேதி கோயில் அலுவலர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகளை அப்புறப்படுத்துவதனால் பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்க இயலாத நிலை இருப்பதாக கூறியதன் அடிப்படையில், பக்தர்கள் மற்றும் திருக்கோயிலின் நலன் கருதி ஜூன் 7ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்