கோவையில் சாப்பாட்டு பிரியர்களை கவரும் உணவு திருவிழா...

சாப்பாட்டு பிரியர்களை கவரும் வகையில் கோவையில் லக்னோவி உணவு திருவிழா நடைபெற உள்ளது.

Update: 2018-09-15 03:34 GMT
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் 23ஆம் தேதி வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.  முகலாய முறைப்படி, மசாலாக்கள் சேர்த்து சமைக்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. அரசர்கள் காலத்தில் எப்படி உணவுகள் சுவையுடனும், நறுமணத்துடனும் பரிமாறப்பட்டதோ, அதே போல இந்த விழாவிலும் மொத்தம் 90 வகை உணவுகள் இடம்பெற உள்ளன. உணவு பரிமாறப்படும் நேரத்தில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்