"விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யுங்கள்" - திருநாவுக்கரசர்
பதிவு: செப்டம்பர் 05, 2018, 10:37 PM
குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனையில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் , காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா முறைகேடு வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகி விட்டதால்,  அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிக்க கூடாது என அறிக்கையொன்றில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோன்று,  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது,  சிபிஐ- யின் கடமை என்று குறிப்பிட்டு உள்ளார்.