மாநில தேர்தல் ஆணையம் 2019ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது, 2019 ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் போல தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Update: 2018-08-14 01:51 GMT
மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது, 2019 ல் கூட உள்ளாட்சி  தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள்  போல தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வார்டு மறுவரையறை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்  முடிக்கப்பட்டு தமிழக அரசு ஒப்புதல் பெற்று, அதன் பிறகு மூன்று மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ஆணையம் அறிக்கை அளித்த பின் எவ்வளவு நாட்களில் அரசு ஒப்புதல் அளிக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த பின் தான் ஒப்புதலுக்கான காலகெடுவை நிர்ணயிக்க முடியும் என தெரிவித்தார். ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கபட்டுள்ள நிலையில் 2019-ல் கூட தேர்தலை நடத்தி முடிக்க மாட்டீர்கள் போல உள்ளது என தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பிறகு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்