குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-16 10:50 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், வடுவூர், செட்டிச் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. ஏ.எஸ்.டி.16, கோ 45 போன்ற 145 நாள் நெல்பயிர் நடவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மும்முனை மின்சாரத்தை அரசு தொடர்ந்து வழங்குவதோடு, ஆக​ஸ்ட் 15-க்குள் கால்வாயில் நீர் திறந்தால், குறுவை சாகுபடியில் நல்ல மகசூலை எட்டமுடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல் மற்றும் உரம் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்