"உங்கள் சொத்துக்களை ஊடுருவல்காரர்களுக்கு பங்கிட காங்., திட்டம்... ஸ்பெஷல் X-ரே ரெடி.." மேடையில் கொந்தளித்த மோடி

Update: 2024-04-26 11:21 GMT

திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் இருப்பது போல் நடிக்கின்றனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு மால்டா பகுதியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேற்குவங்க மக்கள் காட்டும் அன்பைப் பார்க்கையில் கடந்த ஜென்மத்தில் தான் மேற்கு வங்கத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது அடுத்த ஜென்மத்தில் மேற்கு வங்க தாயின் மடியில் பிறக்க வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்தார். தாஜா அரசியல் செய்வதில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி இடையே போட்டோ போட்டி நிலவுவதாக குறிப்பிட்ட பிரதமர் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்களை மேற்கு வங்கத்தில் குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் பணியாற்றி வருவதாகவும், அத்தகைய வாக்கு வங்கியை கொண்டவர்களுக்கு உங்களின் சொத்துக்களை பங்கீடு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி பேசி வருவதாகவும் தெரிவித்தார். திரிணாமூல் காங்கிரஸும், காங்கிரசும் மாநிலத்தில் தங்களுக்குள் மோதல் இருப்பது போல நடிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர், ஏழைகளின் அனைத்து சொத்துக்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என காங்கிரஸ் அறிவித்து இருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக வெளிநாட்டில் இருந்து காங்கிரஸ் ஒரு எக்ஸ்ரே இயந்திரத்தை வாங்கி வந்திருப்பதாகவும் அதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரையும் அவர்கள் எக்ஸ்ரே செய்ய இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.



Tags:    

மேலும் செய்திகள்