8 ஆண்டுகளாக வகுப்பறை இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

திருப்பூர் அரசுப்பள்ளியின் வகுப்பறையில், கடந்த 8 ஆண்டுகளாக இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், வகுப்பறை இன்றி மாணவர்கள், தாழ்வாரத்தில் படித்து வருகின்றனர்.

Update: 2018-07-13 12:10 GMT
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி அருகேயுள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டில், 30 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. அவற்றில், தரை தளத்தில் உள்ள ஆறு அறைகளில், அரசால் இலவசமாக வழங்கப்படும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. ஆனால், எட்டு ஆண்டுகள் ஆகியும், தொலைக்காட்சிப் பெட்டிகள், வேறு இடத்திற்கு மாற்றப்படாததால், மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தாழ்வாரத்திலும், மர நிழலிலும் அவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர். வகுப்பறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்