கோவையில் 11 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை - மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 10 நாளிலேயே சேதம்

சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு தி.மு.க. போராட்டம்

Update: 2018-07-12 08:20 GMT
கோவையில் 11 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை, பயன்பாட்டுக்கு வந்த பத்து நாளிலேயே சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இந்த சாலையில் தி.மு.க. முன்னாள் மாநகர் பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் அக்கட்சியினர் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.  கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலக்காடு மற்றும் குனியமுத்தூர் வழியாக வரும் பேருந்துகள் செல்ல 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 11 கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவருடன் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்