"சேர்க்கையில்லாத, தரம் குறைந்த கல்லூரிகள் மூடல்" - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

மாணவர் சேர்க்கையில்லாத, தரம் குறைந்த கல்லூரிகளே மூடப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-05 07:12 GMT
கேள்வி நேரத்தின் போது பேசிய கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் பிச்சாண்டி, பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படுவதை தடுக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் உயர்கல்வி பயிலக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கடந்தாண்டு ஆயிரத்து 221 புதிய பாடப்பிரிவுகளும், இந்த ஆண்டு 264 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். சில கல்லூரிகள் தரம் குறைந்து இருப்பதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் மட்டுமே மூடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்