டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் விவகாரம் : "அப்படி குறைத்தால், அது டெஸ்ட் போட்டியே அல்ல" - இந்திய அணி முன்னாள் கேப்டன் கும்ப்ளே கருத்து

டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்தால், அதற்கு பெயர் டெஸ்ட் போட்டியே அல்ல என்று ஐ.சி.சி. வல்லுனர்கள் குழு தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-28 12:30 GMT
டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்தால், அதற்கு பெயர் டெஸ்ட் போட்டியே அல்ல என்று ஐ.சி.சி. வல்லுனர்கள் குழு தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், டெஸ்ட் போட்டி 5 நாட்கள் இருந்தால் தான், டெஸ்ட் போட்டியின் தன்மையும், சுவாரஸ்யமும் நீடிக்கும் என்றார். கத்துக்குட்டி அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடந்தால் மட்டும், 4 நாட்களாக குறைத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில், டெஸ்ட் போட்டியின் காலத்தை குறைப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என்றும் கும்ப்ளே தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்