போலி விளம்பரத்தில் கபில் தேவ், கோவிந்தா மற்றும் ரவிகிஷன்...

போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போனவர்களுக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென அந்த விளம்பரத்தில் தோன்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், இந்தி நடிகர் கோவிந்தா உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-10-22 07:09 GMT
குஜராத் மாநிலம் வதோத்ராவில் சன் ஸ்டார் என்ற பெயரில் சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் தங்களது புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், இந்தி நடிகர்கள் கோவிந்தா மற்றும் ரவிகிஷன் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர்களாகவும் அவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

சுற்றுலா செல்வதற்காக பலரும் 'சன் ஸ்டார்' நிறுவனத்தில் பணம் செலுத்திய நிலையில் சுமார் 32 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தப்பியோடியதாக வதோத்ரா நுகர்வோர் மன்றத்தில், 18 பேர் புகார் அளித்தனர். புகார்களை விசாரித்த நுகர்வோர் மன்றம் போலியாக விளம்பரம் அளித்த கபில் தேவ், கோவிந்தா, ரவி கிஷன் ஆகியோர், புகார் அளித்த 18 பேருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்