இந்திய அணியின் மோசமான ஆட்டம் : டெஸ்ட் தோல்வி குறித்து கோலி கருத்து
பதிவு: ஆகஸ்ட் 13, 2018, 04:38 PM
கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் இது என்று லண்டனில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.  லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல என்று கூறினார். பேட்டிங், பந்துவீச்சில் முழு திறனுடன் இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இங்கிலாந்துக்கு நெருக்கடி தர முடியும் என்று கூறிய கேப்டன் கோலி, 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் முழு உடல் தகுதியை எட்டிவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.