ஓட்டு போட்டால் இத்தனை சலுகைகளா! - ஆஃபர்களை அள்ளி தட்டும் பெங்களூர் நிறுவனங்கள்

Update: 2024-04-25 14:21 GMT

ஓட்டு போட்டால், இலவசமாக தோசை, நெய் சாதம், பீர், இலவச பயணம் என பல்வேறு சலுகைகளை பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெங்களூருவில் ஒரு கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 54விழுக்காடு வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இந்நிலையில், வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு விழுக்காட்டை அதிகரிக்கும் வகையிலும் ஏராளமான நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, ஓட்டு போட்டு விரலில் மை இருப்பதை காட்டினால், பட்டர் தோசை, நெய் சாதம், குளிர்பானம் இலவசமாக வழங்கப்படும் என்று நிசார்கா கிராண்ட் ஓட்டல் அறிவித்துள்ளது. பெலந்தூரில் உள்ள ரெஸ்ட்ரோ என்ற கேளிக்கை விடுதி, இலவசமாக பீர் வழங்கப்படும் என்றும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கட்டண சலுகையும் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இதே போன்று சோசியல் என்ற நிறுவனமும், ஒரு வாரத்திற்கு 20 விழுக்காடு சலுகை அறிவித்துள்ளது. பெங்களூரு, மைசூரு மற்றும் மங்களூருவில் ஓட்டு போடும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் வழங்கப்படும் ரேபிடோ நிறுவனம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்