சீண்டி விட்ட இந்தியா கூட்டணி - சரவெடியாய் வெடிக்கும் வானதி சீனிவாசன்

Update: 2024-04-24 03:03 GMT

சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்வதற்காக, மதவாத அரசியலை செய்து வருவதே இந்தியா கூட்டணிதான் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு இந்தியா கூட்டணிக் கட்சியினர் விமர்சித்து வருவதை குறிப்பிட்டுள்ளார். இந்தியா கூட்டணியின் நோக்கத்தை சிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க தொடங்கியுள்ளதாகவும், அது அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். பாஜகவை பொறுத்தவரை முதலில் நாடு. பிறகுதான் கட்சி என்று குறிப்பிட்டுள்ள வானதி சீனிவாசன், தோல்வி பயத்தில் பாஜக மீது எப்போதும் வீசும் மதவாத குற்றச்சாட்டை வீசியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்