வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

Update: 2024-05-05 14:25 GMT

உத்தரபிரதேச மாநிலம் இதாவாவில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, மெயின்புரி, கன்னாஜ் மற்றும் இதாவாவை தங்களது பாரம்பரியமாக கருதுவதாகவும், மற்றவர்கள் அமேதி, ரேபரேலியை தங்களது பாரம்பரியமாக கருதுவதாகவும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்தார். ஆனால், மோடியின் பாரம்பரியம் என்பது, ஏழைகளுக்கு வீடு, கோடிக்கணக்கான மக்களுக்கு கழிப்பறைகள், மின்சாரம், தண்ணீர், இலவச ரேஷன், சிகிச்சை, புதிய கல்விக் கொள்கை என்று கூறினார். மேலும், அரச குடும்பத்தின் வாரிசுகளே முதலமைச்சராகவும், பிரதமராகவும் வரலாம் என்று இருந்த வழக்கத்தை, இந்த டீ வியாபாரி முறியடித்துள்ளார் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்