விமான நிலையத்தில் துப்பாக்கி பறிமுதல் - காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கேரள காங்கிரஸ் பிரமுகர் மீது இந்திய ஆயுத தடைச்சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-05 05:34 GMT
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்த பிரபல காங்கிரஸ் நிர்வாகி கேஎஸ்பிஏ தாங்கள் என்பவர் கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவரது உடைமைகளை சோதனை செய்த போது அவரிடம் கைத்துப்பாக்கி மற்றும் 7 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விமான நிலைய நிர்வாகத்தினர் அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் உரிய ஆவணமின்றி அதனை எடுத்து வந்தது உறுதியானது. இதன்பேரில் ஆயுத தடைச்சட்டத்தின்படி போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்