பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

Update: 2020-09-21 02:39 GMT
பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் மற்றும் படிகளை குறைக்கும் திருத்த மசோதா 2020 மக்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் நிறைவேறியது. இதேபோால் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் தடய அறிவியல் பல்கலைக்கழகம் குறித்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. அந்த துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தி ஊக்கப்படுத்தவும், குஜராத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கும் வகையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்