மோடி, ட்ரம்ப் இடையே பேச்சு எதுவும் நடைபெறவில்லை - வெளியுறவுத்துறை அதிரடி மறுப்பு

இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் அதனை மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-05-29 13:38 GMT
நேற்று செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக தாம் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். இந்திய - சீன எல்லை விவகாரத்தில் சீனாவின் செயல்பாடு மோடிக்கு வருத்தம் அளிக்கும் விதத்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால்  சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் இடையே அண்மைக்காலங்களில் எந்த உரையாடலும் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர்  ஹைட்ராக்சி குளோரோகுயின் விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி தான் கடைசியாக பேசியதாகவும் கூறியுள்ளன. முன்னுக்கு பின் முரணாக வெளிவந்துள்ள இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்