செல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்

வரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.

Update: 2020-04-03 11:00 GMT
கடந்த 2017ல் தமிழகத்தையே உலுக்கியது ஜல்லிக்கட்டு போராட்டம். மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பாரம்பரிய கலையான ஜல்லிக்கட்டை மீட்க திரண்ட அவர்களை அங்கிருந்து விரட்ட மெரினா கடற்கரையில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. ஆனால் அவர்களோ விடாப்பிடியாக தங்கள் செல்போனில் இருந்த விளக்கை ஒளிரவைத்து போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தனர். 

இது உலகம் முழுவதும் பிரபலம் ஆனது. ஐ.பி.எல். தொடங்கி அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் செல்போன் லைட் வெளிச்சம் களைகட்டியது. 

* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்திலும் செல்போன் லைட் வெளிச்சம் இடம் பெற்றது.

* இதுஒருபுறமிக்க, சினிமாவிலும் இதுபோன்ற காட்சிகள் வெகு பிரசித்தம். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்திலும் செல்போன் டார்ச் லைட் தொடர்பான காட்சி வைக்கப்பட்டது. 

* இதுபோல் நடிகர்கள் செந்தில், கவுண்டமணி நடிப்பில் வெளியான மகாபிரபு படத்திலும் ஆண்கள் கைகளில் அகல் விளக்கை ஏந்தி நிற்பது போல காட்சி வைக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த சீன் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது... 

Tags:    

மேலும் செய்திகள்