குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றம் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

இந்தாண்டுக்கான அரசின் முதல் கொள்கை அறிக்கையாக பார்க்கப்படும், குடியரசுத் தலைவர் உரையில் பொருளாதார சரிவை எவ்வாறு அரசு எதிர்க்கொள்ள போகிறது என்பது தொடர்பான எந்த வழிமுறையும் இடம்பெறவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-31 10:24 GMT
இந்தாண்டுக்கான அரசின் முதல் கொள்கை அறிக்கையாக பார்க்கப்படும், குடியரசுத் தலைவர் உரையில் பொருளாதார சரிவை எவ்வாறு அரசு எதிர்க்கொள்ள போகிறது என்பது தொடர்பான எந்த வழிமுறையும் இடம்பெறவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரையில், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டது குறித்தோ, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பற்றி எந்த தகவலும் இடம் பெறவில்லை என ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். இதேபோல வேலையின்மை அதிகரிப்பு மற்றும் உணவுப் பொருள் பணவீக்கம் அதிகரிப்பு தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் உரையில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். தடைப்பட்ட திட்டங்கள் மற்றும் முதலீடு வரத்து குறைவு பற்றியும் குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்