முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: "ஓ.பி.சி-க்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும்" - திருச்சி சிவா, எம்.பி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார்.

Update: 2019-12-09 10:10 GMT
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்பி திருச்சி சிவா  வலியுறுத்தினார்.  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பில் பிற்பட்டவருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசின் கல்லூரிகளில் மட்டுமே பொருந்தும் என்றும், மாநில அரசு கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய தொகுப்பில் உள்ள 4 ஆயிரத்து 155 இடங்களில் 300 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே உரிய  நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.
 

Tags:    

மேலும் செய்திகள்