தீயாய் பரவும் மாவோயிஸ்டுகள் வீடியோ.. ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு.. தீவிர சோதனையில் களமிறங்கிய போலீஸ்

Update: 2024-04-25 10:01 GMT

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் தமிழக பகுதிக்குள் வராமல் இருக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் பல வருடங்களாக தேடப்பட்டு வரும் இந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க கேரளா தண்டர்போடு எனப்படும் அதிரடிப்படையினர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் தமிழக வனப்பகுதிக்குள் புகாமல் இருக்க கேரளா - கர்நாடக எல்லைகளில் தமிழக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளா-தமிழ்நாடு எல்லையான நாடு காணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார் குன்னு, தாளூர், கக்குண்டி போன்ற பகுதிகளிலும் தமிழக - கர்நாடக எல்லையான கக்கன நல்லா சோதனை சாவடியிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்