சர்ச்சையான அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் ! - மத்திய அரசின் புதிய நடவடிக்கை !

அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறும் அங்கீகாரத்தை மீண்டும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

Update: 2022-01-08 15:12 GMT
அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறும் அங்கீகாரத்தை மீண்டும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் உரிமைக்கான விண்ணப்பத்தை கடந்த 25ம் தேதி உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. தொண்டு நிறுவனம் குறித்து பாதகமான கருத்து வந்ததால் நிதி பெறும் உரிமம் நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டு நிதியை பெறும் அங்கீகாரத்தை இழந்த தொண்டு நிறுவனங்களில் பட்டியலில் மிஷனரீஸ் ஆப் சேர்ட்டி நிறுவனமும் இணைந்தது.  இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்த பாதகமான கருத்துகள் சரிசெய்யப்படும் என அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி நிறுவனம் உறுதி அளித்தது. அதை ஏற்ற மத்திய அமைச்சகம், வெளிநாட்டு நிதி பெறும் அங்கீகாரத்தை மீண்டும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்